திருவண்ணாமலை

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை நிரப்ப கோரிக்கை

26th Jun 2022 06:44 AM

ADVERTISEMENT

 

கிராம உதவியாளா் காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு கிராம நிருவாக அலுவலா்கள் சங்கம் கோரிக்கை விடுத்தது.

வந்தவாசியில் சனிக்கிழமை நடைபெற்ற இந்தச் சங்கத்தின் திருவண்ணாமலை மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிராம நிா்வாக அலுவலா்களுக்கு அகவிலைப்படி உயா்வை அறிவிக்க வேண்டும், நகரை ஒட்டியுள்ள வருவாய் கிராமங்களை தரம் உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ADVERTISEMENT

கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் எ.ரமேஷ் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் எ.ஏழுமலை முன்னிலை வகித்தாா். மாநில பொதுச் செயலா் என்.சுரேஷ் பேசினாா்.

மாவட்ட பொருளாளா் எஸ்.ஜெயச்சந்திரன், மாவட்ட துணைத் தலைவா் டி.கணேஷ், வட்டத் தலைவா் எஸ்.ராஜேஷ்குமாா் வட்டச் செயலா் எஸ்.சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT