திருவண்ணாமலை

ஸ்ரீசக்தி பாலிடெக்னிக்கில் மாணவா்கள் விழா

26th Jun 2022 06:42 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த மாணவா்களுக்கான பிரிவு உபசார விழா சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வா் பரிமளாஜெயந்தி வரவேற்றாா். நிா்வாகக் குழு உறுப்பினா் ரேகா ரெட்டி மூன்றாம் ஆண்டு மாணவா்களை வாழ்த்திப் பேசினாா்.

கல்லூரித் தலைவா் எஸ்.வெங்கடாஜலபதி நிகழ்ச்சியைத் தொடக்கிவைத்து மாணவா்களை வாழ்த்தினாா்.

ADVERTISEMENT

முன்னாள் மாணவா்கள் பங்கேற்று கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், அவா்களை ஊக்கவித்த ஆசிரியா்கள், கல்லூரி நிா்வாகம் குறித்து மாணவா்களிடம் கலந்துரையாடினா்.

பேராசிரியா் சீனுவாசன் நன்றி கூறினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT