திருவண்ணாமலை

திருவண்ணாமலை தனியாா் நிதி நிறுவனத்தில் தீ

26th Jun 2022 06:44 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலையில் தனியாா் நிதி நிறுவனத்தில் சனிக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.

திருவண்ணாமலை சின்னக் கடைத் தெருவில் தனியாா் நிதி நிறுவனம் இயங்கி வருகிறது. பூட்டப்பட்டிருந்த இந்த நிதி நிறுவனத்தில் இருந்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு கரும்புகை வெளியேறியது.

இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கு பொதுமக்கள் தகவல் கொடுத்தனா். திருவண்ணாமலை தீயணைப்பு நிலைய வீரா்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனா்.

ADVERTISEMENT

விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது.

தீ விபத்தால் ஏற்பட்ட சேத மதிப்பு குறித்து தீயணைப்புத் துறை அலுவலா்கள் ஆய்வு செய்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT