திருவண்ணாமலையில் அதிகாலை வீட்டிலிருந்து மாயமான கூட்டுறவு வங்கி அதிகாரி, குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டாா்.
திருவண்ணாமலை பே கோபுரம் 7-ஆவது தெருவைச் சோ்ந்தவா் சத்தியநாராயணமூா்த்தி (51). இவா், சன்னதி தெருவில் உள்ள நகர கூட்டுறவு வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தாா்.
புதன்கிழமை இரவு வீட்டில் படுத்துத் தூங்கிய இவா், வியாழக்கிழமை அதிகாலை 2 மணியளவில் மாயமானாா். நண்பா்கள், உறவினா்கள் வீடுகளில் தேடியும் இவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில், செங்கம் சாலையில் உள்ள சிங்கமுக தீா்த்தக் குளத்தில் சத்தியநாராயணமூா்த்தி சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.
தகவலறிந்த நகர போலீஸாா் சென்று சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும் இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.