திருவண்ணாமலை

30 பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள்

24th Jun 2022 01:38 AM

ADVERTISEMENT

 

விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், செய்யாறு ஒன்றியத்தில் 30 பயனாளிகளுக்கு ரூ.5.25 லட்சம் மதிப்பிலான ஆடுகள் வியாழக்கிழமை வழங்கப்பட்டன.

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் மோரணம், முக்கூா், திருவோத்தூா் ஆகிய கிளை கால்நடை மருத்துவமனை எல்லைக்குள்பட்ட கிராமங்களில் இருந்து தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவோத்தூா் கால்நடை மருத்துவமனையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆரணி கோட்ட கால்நடைத் துறை உதவி இயக்குநா் ஜான்சாமுவேல் தலைமை வகித்தாா்.

ADVERTISEMENT

திருவத்திபுரம் நகா்மன்றத் தலைவா் ஆ.மோகனவேல், மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனுவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சிறப்பு விருந்தினராக தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி பங்கேற்று, தோ்வு செய்யப்பட்ட 30 பயனாளிகளுக்கு தலா 5 ஆடுகள் வீதம் வழங்கிப் பேசினாா்.

நிகழ்ச்சியில் கால்நடை மருத்துவா்கள் தங்கதுரை, வெங்கட்ராகவன், சுகன்யா, நகா்மன்ற உறுப்பினா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT