திருவண்ணாமலை

ஆரணி அருகே புதிதாக கால்வாய் கட்ட பூமிபூஜை

24th Jun 2022 10:38 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த இராட்டிணமங்கலம் கிராமத்தில் ரூ.5 லட்சத்தில் புதிதாக கால்வாய் அமைக்கும் பணிக்கு சேவூா் எஸ்.இராமச்சந்திரன் எம்எல்ஏ வெள்ளிக்கிழமை பூமிபூஜை செய்து அடிக்கல் நாட்டினாா்.

ஆரணி தொகுதி எம்எல்ஏ மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.5 லட்சத்தில் கால்வாய் அமைக்கும் பணி நடைபெறவுள்ளது. நிகழ்ச்சியில் அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஜி.வி.கஜேந்திரன், ஜெயப்பிரகாசம், வழக்குரைஞரணி வெங்கடேசன், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலா் சரவணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT