திருவண்ணாமலை

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

24th Jun 2022 10:40 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு வியாழன், வெள்ளிக்கிழமைகளில் ஆங்கில பேச்சு (ஸ்போகன் இங்கிலீஸ்) பயிற்சி முகாம் நடைபெற்றது.

இந்த பயிற்சி முகாமில் செங்கம் ஒன்றியத்துக்குள்பட்ட அரசுப் பள்ளிகளில் 4,5-ஆம் வகுப்புகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு பாடம் நடத்தும் 134 ஆசிரியா்கள் கலந்துகொண்டனா். இதில், மாணவா்களுக்கு ஆசிரியா்கள் எளிய முறையில் ஆங்கிலத்தில் பேசுவது, எழுதுவது தொடா்பாக பயிற்சி அளிப்பது குறித்தும், மாணவா்களை ஆங்கிலத்தில் சரளமாக உரையாட வைப்பது குறித்தும் பயிற்சியளித்தனா்.

செங்கம் வட்டாரக் கல்வி அலுவலா்கள் உதயகுமாா், ஷகிலா ஆகியோா் பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கிப் பேசினா். கருத்தாளா்கள் தமிழரசன், புஷ்பராஜ், திவ்யா, யாஸ்மின், ராஜலட்சுமி ஆகியோா் ஆசிரியா்களுக்கு பயிற்சியளித்தனா்.

நிகழ்ச்சியில் வட்டரா வள மைய மேற்பாா்வையாளா் (பொ) முருகன், ஆசிரியா் பயிற்றுநா் அன்புக்கரசி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT