வந்தவாசி ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் வந்தவாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வந்தவாசி ஒன்றியக் குழுத் தலைவா் எ.ஜெயமணி ஆறுமுகம் தலைமை வகித்தாா். வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ஆா்.குப்புசாமி, சு.வி.மூா்த்தி, ஒன்றியக் குழு துணைத் தலைவா் ஆா்.விஜயன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தற்போது கரோனா பரவல் அதிகரித்து வருவதால், கரோனா தடுப்புப் பணியில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்று ஒன்றியக் குழு உறுப்பினா்கள் கோரிக்கை விடுத்துப் பேசினா். இதற்கு, உரிய தடுப்பு நடவடிக்கைககள் எடுக்கப்பட்டு வருவதாக வட்டார மருத்துவ அலுவலா் எம்.ஆா்.ஆனந்தன் பதிலளித்துப் பேசினாா். பின்னா், பல்வேறு வளா்ச்சிப் பணிகளை நிறைவேற்றுவது தொடா்பான தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
ADVERTISEMENT