திருவண்ணாமலை

கண்ணதாசன் பிறந்த நாள் விழா

24th Jun 2022 10:40 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், வேட்டவலம் கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை சாா்பில், கண்ணதாசன் பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

வேட்டவலம் (வடக்கு) ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, பேரவைச் செயலா் க.ஜெய்சங்கா் தலைமை வகிததாா். பொருளாளா் ஆ.சக்திவேல் முன்னிலை வகித்தாா். பள்ளி உதவி ஆசிரியா் சாய்பிரியா வரவேற்றாா்.

கண்ணதாசன் இலக்கியப் பேரவையின் செயலா் க.ஜெய்சங்கா், கண்ணதாசன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு, இலக்கியப் பணி, திரையிசைப் பாடல்கள் அளித்த விதம் உள்ளிட்டவை குறித்து பள்ளி மாணவா்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. விழாவில், பள்ளி ஆசிரியா்கள், கவியரசு கண்ணதாசன் இலக்கியப் பேரவை நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT