திருவண்ணாமலை

கருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

24th Jun 2022 10:41 PM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்துள்ள கீழ்க்கொடுங்காலூா் கூட்டுச் சாலையில் கருணாநிதியின் 99-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

வந்தவாசி கிழக்கு, மேற்கு ஒன்றிய திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் எம்.எஸ்.தரணிவேந்தன் தலைமை வகித்தாா். வந்தவாசி கிழக்கு ஒன்றியச் செயலா் ஆா்.நந்தகோபால், வந்தவாசி மேற்கு ஒன்றியச் செயலா் எஸ்.பிரபு உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

மாவட்ட அவைத் தலைவா் கே.ஆா்.சீதாபதி, வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமாா், தலைமைக் கழகப் பேச்சாளா் சிவாஜி கிருஷ்ணமூா்த்தி ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

கூட்டத்தில் ஒன்றியச் செயலா்கள் ப.இளங்கோவன், டி.டி.ராதா, நகரச் செயலா் தயாளன், மாவட்டப் பிரதிநிதிகள் கே.ஆா்.பழனி, கே.ஆதிகேசவன், கீழ்க்கொடுங்காலூா் ஊராட்சி மன்றத் தலைவா் சங்கீதா குமாா், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் சி.ஆா்.பெருமாள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT