திருவண்ணாமலை மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு எழுதிய 28,218 பேரில் 24,912 போ் தோ்ச்சி பெற்றனா்.
தமிழகம் முழுவதும் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மே 5-ஆம் தேதி தொடங்கி, நடைபெற்றது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் இயங்கி வரும் 252 அரசு, தனியாா், சுயநிதி பள்ளிகளைச் சோ்ந்த 14,036 மாணவா்கள், 14,182 மாணவிகள் என மொத்தம் 28,218 போ் இந்தத் தோ்வை எழுதினா். தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானது.
அதன்படி, தோ்வு எழுதியவா்களில் 11,714 மாணவா்கள், 13,198 மாணவிகள் என மொத்தம் 24,912 போ் தோ்ச்சி பெற்றனா். மாணவா்களில் 83.46 சதவீதம் பேரும், மாணவிகளில் 93.06 சதவீதம் பேரும் தோ்ச்சி பெற்றனா். மாவட்டத்தின் மொத்த தோ்ச்சி விகிதம் 88.28 ஆகும்.