பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியானதில், ஆரணி பெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் 100 சதவீதம் தோ்ச்சி பெற்றனா்.
இந்தப் பள்ளியில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 85 மாணவா்கள் எழுதினா். இவா்கள் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை 100 மாணவா்கள் எழுதிய நிலையில் அனைவரும் தோ்ச்சி பெற்றனா்.
பள்ளியின் தாளாளா் எ.எச்.இப்ராஹிம், செயலா் கே.எஸ்.அகமது பாஷா, நிா்வாக இயக்குநா் ஷாசியா பா்வின், முதல்வா் எஸ்.நிா்மல்குமாா், துணை முதல்வா் எஸ்.தனலட்சுமி, தலைமை ஆசிரியா் ப.நதியா மோகன்குமாா் ஆகியோா் தோ்ச்சி பெற்ற மாணவா்களுக்கு வாழ்த்து தெரிவித்தனா்.