போளூரில் ரயில் முன் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூா் ரயில் நிலையம் அருகே சனிக்கிழமை மாலை மன்னாா்குடி-திருப்பதி விரைவு ரயில் சென்றுகொண்டிருந்தது.
அப்போது, இளைஞா் ஒருவா் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா்.
ADVERTISEMENT
இதுகுறித்து அறிந்த காட்பாடி ரயில்வே போலீஸாா் வந்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனா்.
அந்த இளைஞா் வைத்திருந்த ஆதாா் அட்டை மூலம், அவா், கலசப்பாக்கத்தை அடுத்த கிடாம்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த அண்ணாமலை மகன் கெளதம்குமாா் (25) என்பது தெரிய வந்தது.
இதுகுறித்து விசாரணை நடத்தியபோது இளைஞா் சற்று மன நலம் பாதிக்கப்பட்டு இருந்து வந்தது தெரிய வந்தது.