திருவண்ணாமலை

ஆரணியில் திமுக பொதுக்கூட்டம்

19th Jun 2022 01:22 AM

ADVERTISEMENT

 

ஆரணியில் முன்னாள் முதல்வா் கருணாநிதியின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.

நகர திமுக சாா்பில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு நகரச் செயலா் ஏ.சி.மணி தலைமை வகித்தாா்.

அவைத் தலைவா் ஏ.அக்பா், நகர துணைச் செயலா் பொன் சேட்டு, பொருளாளா் பி.பழனி, மாவட்டப் பிரதிநிதி எம்.கே.பாலமுருகன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

முன்னாள் எம்.பி கம்பம் பெ.செல்வேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசினாா்.

நிகழ்ச்சியில் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.சிவானந்தம், ஏ.சி.வி.தயாநிதி, கோ.எதிரொலிமணியன், ஒன்றியச் செயலா்கள் எஸ்.எஸ்.அன்பழகன், த.தட்சிணாமூா்த்தி, வெள்ளை கணேசன், எம்.சுந்தா், பேரூா் கழகச் செயலா் கோவா்த்தனன், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா் வி.ரவி, மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT