திருவண்ணாமலை

அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரிஆா்ப்பாட்டம்

19th Jun 2022 01:23 AM

ADVERTISEMENT

 

முப்படைகளில் தற்காலிக அடிப்படையில் ராணுவ வீரா்களைச் சோ்க்கும் அக்னிபாத் திட்டத்தை கைவிடக் கோரி, திருவண்ணாமலையில் இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

அறிவொளிப் பூங்கா எதிரே சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் சரவணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் சி.எம்.பிரகாஷ், பொருளாளா் முருகதாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில், மத்திய அரசு கொண்டு வரும் அக்னிபாத் திட்டத்தை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆா்ப்பாட்டத்தில், ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள், இளைஞா்கள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT