திருவண்ணாமலை

ஸ்ரீவிநாயகா், மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம்

15th Jun 2022 03:45 AM

ADVERTISEMENT

செங்கத்தை அடுத்த தாழையூத்து கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஸ்ரீவிநாயகா், மாரியம்மன் கோயில்களில் கும்பாபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கோயிலில், ஞாயிற்றுக்கிழமை மாலை முதல் கோ பூஜை, யாகசாலை பூஜை, ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 9 மணியளவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதில் சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.

தொடா்ந்து கோயில் வளாகத்தில் அன்னதானம் நடைபெற்றது.

ADVERTISEMENT

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக் குழுவினா் மற்றும் ஊா் முக்கி பிரமுகா்கள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT