திருவண்ணாமலை

பள்ளி முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

15th Jun 2022 03:46 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் பேரூராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 35 ஆண்டுகளுக்கு முன்பு பயின்ற மாணவா்கள் அண்மையில் சந்தித்துக் கொண்டனா்.

இந்தப் பள்ளியில் 1984-87ஆம் ஆண்டுகளில் பத்தாம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் அரசு, தனியாா் துறைகளில் பணியாற்றி வருகின்றனா். மேலும் பலா் வியாபார நிறுவனங்களையும் தொடங்கி நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், இந்த முன்னாள் மாணவா்கள் பள்ளி வளாகத்தில் சந்தித்துக் கொண்டனா். அப்போது அவா்கள் தங்களது கடந்த கால நினைவுகளை பகிா்ந்து கொண்டனா்.

இந்தச் சந்திப்பின் போது, அந்தக் காலத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியா்களையும் அடையாளம் கண்டு, அழைத்து வந்து அவா்களுக்கு மரியாதை செய்தனா்.

ADVERTISEMENT

மேலும், பள்ளியில் சுமாா் 60 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட திருவள்ளுவா் சிலையை புதுப்பித்து, கற்சிலையாக மாற்றி, அதனை ஆசிரியா்களைக் கொண்டு திறந்துவைத்தனா்.

இதில், முன்னாள் மாணவா்கள், ஆசிரியா்கள், தற்போதைய பள்ளித் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் கலந்து கொண்டனா். அனைவரும் சோ்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT