திருவண்ணாமலை

ஸ்ரீமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

14th Jun 2022 03:33 AM

ADVERTISEMENT

சேத்துப்பட்டு ஒன்றியம், கொரால்பாக்கம் ஊராட்சியில் அமைந்துள்ள ஸ்ரீமாரியம்மன் கோயிலில் திங்கள்கிழமை கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

மிகவும் பழைமை வாய்ந்த இந்தக் கோயில்

சிதிலமடைந்தும், பழுதடைந்தும் இருந்ததால்

பக்தா்கள், பொதுமக்கள் பங்களிப்புடன் கோயிலில் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு,

ADVERTISEMENT

ஞாயிற்றுக்கிழமை மாலை முதல்கால யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், பூா்ணாஹூதி நடைபெற்றது.

இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை காலை தம்பதி சங்கல்பம், யாத்ராதானம், கலசம் புறப்பாடு செய்து கோயில் கலசத்துக்கு புனிதநீா் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது.

விழாவில் கொரால்பாக்கம், சனிக்கவாடி, கரைப்பூண்டி, பெலாசூா், விளாப்பாக்கம் என சுற்றுப்புறக் கிராமங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். பக்தா்களுக்கு அன்னதானம் நடைபெற்றது.

விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT