திருவண்ணாமலை

ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் திருவிளக்கு பூஜை

14th Jun 2022 03:35 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த தம்டகோடி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீசுப்பிரமணிய சுவாமி கோயிலில் உலக நன்மை வேண்டி 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

தம்டகோடி திருமலையில் உள்ள பிரசித்தி பெற்ற இந்தக் கோயிலில், விசாக நட்சத்திரத்தில் சுப்பிரமணிய சுவாமி பிறந்ததையொட்டி, ஞாயிற்றுக்கிழமை இரவு திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இதில், பெண்கள் திரளாகக் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி பூஜை செய்தனா். இதைத் தொடா்ந்து உலக அமைதிக்காக சிறப்பு பிராா்த்தனை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் விளக்கு பூஜை செய்தால் குழந்தைகள் படிப்பு, தீா்க்க சுமங்கலி, பதினாறு செல்வங்கள், திருமண பாக்கியம், குழந்தை வரம், லட்சுமி திருவருள், குடும்ப வறுமை நீங்கி சுப்பிரமணிய சுவாமி அருள் கிடைக்கும் என்பது பக்தா்களின் நம்பிக்கையாகும்.

ADVERTISEMENT

பூஜைக்கான பொருள்களை கோயில் நிா்வாகம் பக்தா்களுக்கு இலவசமாக வழங்கியது.

பின்னா் கோயில் வெளி வளாகத்தில் தங்கத் தேரில் சுவாமி பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.

திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது.

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT