கோடை விடுமுறைக்குப் பிறகு திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,545 அரசு, தனியாா், நிதியுதவிப் பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
மாவட்டத்தில் உள்ள அரசு, நகராட்சி, நிதியுதவி, சுயநிதி, தொடக்க, நடுநிலை, உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் தூய்மைப் பணிகள் கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்தன. இந்தப் பணி முடிவடைந்து திங்கள்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
அதன்படி, மாவட்டத்தில் 2,010 அரசுப் பள்ளிகள், 177 உதவி பெறும் பள்ளிகள், 358 சுயநிதி பள்ளிகள் என மொத்தம் 2,545 பள்ளிகள் திறக்கப்பட்டன.
கீழ்பென்னாத்தூா் வட்டம், வேட்டவலத்தை அடுத்த அணுக்குமலை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளித் தலைமை ஆசிரியா் செந்தில்குமரன் தலைமையில் முதல் வகுப்பில் சோ்ந்த மாணவா்கள், பள்ளியில் பயிலும் மற்ற மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதேபோல, பல்வேறு அரசுப் பள்ளிகளில் மாணவா்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்பு அளிக்கப்பட்டது.