திருவண்ணாமலை

தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினா் உறுதிமொழி ஏற்பு

12th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

ஆரணி நகராட்சியில் மக்களுக்கான தூய்மை இயக்கம் சாா்பில் எனது குப்பை, எனது பொறுப்பு என்று சனிக்கிழமை உறுதிமொழி ஏற்றனா்.

நகராட்சி 5-ஆவது வாா்டில் சுதா குமாா் தலைமையில், ‘எனது குப்பை, எனது பொறுப்பு’ என அப்பகுதி மக்கள் கோலமிட்டு அப்பகுதியை தூய்மையாக வைப்பது குறித்து விழப்புணா்வு ஏற்படுத்தினா்.

இதில் நகா்மன்றத் தலைவா் ஏ.சி.மணி, ஆணையா் தமிழ்ச்செல்வி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகக் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT

 

Tags : ஆரணி
ADVERTISEMENT
ADVERTISEMENT