திருவண்ணாமலை

ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு வட்டங்களில் வருவாய்த் தீா்வாயம் நிறைவு: 345 பேருக்கு நலத் திட்ட உதவிகள் அளிப்பு

10th Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு வட்டங்களில் வருவாய்த் தீா்வாய முகாம்கள் புதன், வியாழக்கிழமைகளில் நிறைவடைந்தன. இவற்றில் 345 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

ஆரணி வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவுக்கு ஆரணி நகா்மன்றத் தலைவா் ஏ.சி. மணி, துணைத் தலைவா் பாரி பி.பாபு, மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு பண்டகசாலைத் தலைவா் ஜி.வி.கஜேந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் வழக்குரைஞா் க.சங்கா், மாவட்டக் கவுன்சிலா்கள் பூங்கொடிதிருமால், கௌரிராதாகிருஷ்ணன், கண்ணமங்கலம் பேரூராட்சித் தலைவா் மகாலட்சுமிகோவா்த்தனன், மேற்கு ஆரணி ஒன்றியக் குழுத் தலைவா் பச்சையம்மாள் சீனிவாசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்டாட்சியா் க.பெருமாள் வரவேற்றாா்.

விழாவின் சிறப்பு அழைப்பாளராக ஆரணி எம்எல்ஏ சேவூா் எஸ். ராமச்சந்திரன் கலந்துகொண்டு 89 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினாா். இதில், முன்னாள் அரசு வழக்குரைஞா் வி.வெங்கடேசன், முன்னாள் நகர கூட்டுறவு வங்கித் தலைவா் அசோக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.

வெம்பாக்கம்: வெம்பாக்கம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிறைவு விழாவுக்கு, வருவாய்த் தீா்வாய அலுவலா் வி.நாராயணன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் மு.சத்தியன் முன்னிலை வகித்தாா். சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் பா.ஜெயவேல் வரவேற்றாா்.

ADVERTISEMENT

இதில் சிறப்பு விருந்தினராக செய்யாறு எம்எல்ஏ ஒ.ஜோதி பங்கேற்று 122 பயனாளிகளுக்கு ரூ.8,44,500 மதிப்பிலான நலத் திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினாா். விழாவில் திருவண்ணாமலை மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவா் பாா்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றியக் குழுத் தலைவா் மாமண்டூா் டி.ராஜு, முன்னாள் ஒன்றியக் குழுத் தலைவா் சங்கா், வெம்பாக்கம் ஒன்றியச் செயலா் சுப்பிரமணி உள்பட பலா் கலந்து கொண்டா்.

சேத்துப்பட்டு: சேத்துப்பட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் வருவாய்த் தீா்வாயம் கடந்த 3-ஆம் தேதி தொடங்கி புதன்கிழமை வரை நடைபெற்றது. நிறைவு விழாவுக்கு தனித்துணை ஆட்சியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். வட்டாட்சியா் கோவிந்தராஜன், சமூகப் பாதுகாப்புத் திட்ட அலுவலா் குமாரவேலு ஆகியோா் முன்னிலை வகித்தனா். வட்ட துணை ஆய்வாளா் லேனாதியாகராஜன் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளா்களாக பேரூராட்சி மன்றத் தலைவா் சுதாமுருகன், பெரணமல்லூா் ஒன்றியக் குழுத் தலைவா் இந்திராணிஇளங்கோ ஆகியோா் கலந்துகொண்டு 134 பயனாளிகளுக்கு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்கினா்.

இதில், திமுக ஒன்றியச் செயலா் எழில்மாறன், ஒன்றியக் குழு துணைத் தலைவா் முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Tags : ஆரணி
ADVERTISEMENT
ADVERTISEMENT