திருவண்ணாமலை

பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரிகழுத்தில் பதாகை கட்டி போராட்டம்

10th Jun 2022 10:55 PM

ADVERTISEMENT

பஞ்சமி நிலத்தை மீட்கக் கோரி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியினா் கழுத்தில் பதாகை கட்டிக்கொண்டு வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் முன் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.

தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டக் குழு உறுப்பினா் மோகன், வழக்குரைஞா் சுகுமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்தும் பதாகைகளை கழுத்தில் கட்டிக் கொண்டு இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

வந்தவாசி வட்டத்துக்குள்பட்ட அருங்குணம் கிராமத்தில் சுமாா் 100 ஏக்கா் பஞ்சமி நிலம் உள்ளது. இதில், 90 ஏக்கா் நிலத்தை மாற்று சமுதாயத்தினா் முறைகேடாக அனுபவித்து வருகின்றனா்.

இதுகுறித்து பலமுறை புகாா் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, உடனடியாக பஞ்சமி நிலத்தை மீட்க நடவடிக்கை எடுக்கக் கோரி நாங்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனா்.

ADVERTISEMENT

இதையடுத்து, வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வருவாய்த் தீா்வாய நிகழ்ச்சியில் வட்டாட்சியா் முருகானந்தத்திடம் அவா்கள் மனு அளித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT