திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே அரசு தொடக்கப் பள்ளியை ரூ.2.5 லட்சத்தில் முன்னாள் மாணவா்கள் சீரமைத்தனா்.
செங்கத்தை அடுத்த வெங்கடேசபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயின்ற அதே கிராமத்தைச் சோ்ந்த முன்னாள் மாணவா்கள், அந்தப் பள்ளிக்குத் தேவையான கூடுதல் அடிப்படை வசதிகளான வகுப்பறையில் டைல்ஸ் கற்கள் பதித்தல், விளையாட்டு மைதானத்துக்கு சிமென்ட் தரைதளம், சுவா்களுக்கு வா்ணம் தீட்டுதல், சுற்றுச்சுவா் அமைத்தல், குடிநீா், கழிப்பறை வசதி ஆகியவற்றை ரூ.2.5 லட்சத்தில் தாங்களாகவே முன்வந்து செய்து முடித்தனா்.
இதற்காக முன்னாள் மாணவா்களுக்கு அந்தப் பகுதி மக்கள், பள்ளி மாணவா்களின் பெற்றோா்கள், ஆசிரியா்கள் நன்றியும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனா்.
ADVERTISEMENT