திருவண்ணாமலை அருகே சாலை விபத்தில் விவசாயி உயிரிழந்தாா்.
திருவண்ணாமலையை அடுத்த சின்னகல்லப்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நீலன் (65). இவா், வியாழக்கிழமை மாலை அதே பகுதியில் நடைபெற்ற தனது உறவினா் வீட்டு மஞ்சள் நீராட்டு விழாவில் கலந்து கொண்டாா். பின்னா், மனைவியுடன் வீட்டுக்கு நடந்து வந்துகொண்டிருந்தாா். திருவண்ணாமலை - திருக்கோவிலூா் சாலை, சித்தன் நகா் அருகே வந்தபோது அந்த வழியே வந்த அடையாளம் தெரியாத வாகனம் நீலன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த அவரை பொதுமக்கள் மீட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். இருப்பினும், அங்கு வியாழக்கிழமை இரவு நீலன் உயிரிழந்தாா். இதுகுறித்து வெறையூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.