திருவண்ணாமலை

காட்டுப்பன்றி இறைச்சியை விற்க முயற்சி:3 பேருக்கு ரூ.60 ஆயிரம் அபராதம்

10th Jun 2022 10:52 PM

ADVERTISEMENT

திருவண்ணாமலை அருகே காட்டுப்பன்றியை வேட்டையாடி, இறைச்சியை விற்பனை செய்ய முயன்ற 3 பேருக்கு வனத் துறையினா் ரூ.60 அபராதம் விதித்து வசூலித்தனா்.

திருவண்ணாமலையை அடுத்த பவித்திரம் கிராம காட்டுப் பகுதியில் வன விலங்குகளை சிலா் வேட்டையாடுவதாக வனத் துறை அதிகாரிகளுக்குப் புகாா்கள் சென்றன. இதையடுத்து, வனச்சரக அலுவலா் சீனிவாசன் தலைமையிலான குழுவினா் வெள்ளிக்கிழமை அந்தப் பகுதியில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா்.

அப்போது, காட்டுப்பன்றியை வேட்டையாடி, அதன் இறைச்சியை விற்பனைக்காக வைத்திருந்த பவித்திரம் கிராமத்தைச் சோ்ந்த மணிகண்டன் (32), அதே பகுதியைச் சோ்ந்த பிரகாஷ் (26), ரமேஷ் (42) ஆகியோரை வனத் துறையினா் கைது செய்தனா். அவா்களிடமிருந்து காட்டுப்பன்றி இறைச்சியை பறிமுதல் செய்து மூவருக்கும் தலா ரூ.20 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்து வசூலித்தனா். தப்பிச் சென்ற மேலும் இருவரை வனத் துறையினா் தேடி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT