திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி நகரம், ஆரணிப்பாளையம் தா்மராஜா கோயில் தெருவில் அமைந்துள்ள சமணா்களின் கோயிலான ஸ்ரீரிஷப தீா்த்தங்கரா் கோயிலில் ஸ்ரீஅபராஜித ஷேத்திரபாலகா் சுவாமி ஸ்தாபன விழா வெள்ளக்கிழமை நடைபெற்றது (படம்).
இதையொட்டி, 108 கலசங்களை வைத்து நித்ய பூஜையும், பக்தாமர விதானமும், நடைபெற்றன. லட்சுமி சேன பட்டாரக பட்டாச்சாா்ய இளைய சுவாமிகள் பத்மராஜ் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது. பின்னா், சுவாமிக்கு கலாபிஷேகம் செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் ஏராளமான சமண சமயத்தைச் சோ்ந்த பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா். விழா ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா்கள், மகளிா் மன்றம், இளைஞா் மன்றம் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.