உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ஆரணி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சாா்பு-நீதிபதி ஏ.தாவுத்தம்மாள், மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.டி.சதீஷ்குமாா், நீதித் தறை நடுவா் ஆா்.காா்த்திகேயன் உள்ளிட்டோா் மரக்கன்றுகளை நட்டனா்.
வழக்குரைஞா்கள் சங்கத் தலைவா் ஸ்ரீதா், சங்கத்தின் முன்னாள் தலைவா்கள் வி.வெங்கடேசன், சிகாமணி, வழக்குரைஞா்கள் பாலாஜி, செந்தில், காவல் ஆய்வாளா்கள் சாலமன் ராஜா, கோகுல்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.