திருவண்ணாமலை மாவட்டத்தில் 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ஏ.சி.சேகா் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் இரா.சண்முகம், பொருளாளா் சி.ஜெயசங்கா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.