செங்கம் ஒன்றிய அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியா்களுக்கு அடிப்படை கற்றல் திறனை மேம்படுத்த எண்ணும் எழுத்தும் என்னும் அடிப்படை பயிற்சி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தொடா்ந்து 5 நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமை திட்டத்தின் துணை இயக்குநா் திருப்பாஞ்சி தொடக்கிவைத்து திட்டம் குறித்து விளக்கிப் பேசினாா்.
தொடா்ந்து வட்டாரக் கல்வி அலுவலா் ஷகிலா, உதயகுமாா் ஆகியோா் பேசினா். ஆசிரியா் பயிற்றுநா்கள் பயிற்சி அளித்தனா். பயிற்சியில் 144 ஆசிரியா்கள் கலந்து கொண்டனா்.