திருவண்ணாமலை

ஆசிரியா்களைப் பாராட்ட மாணவா்கள் முன்வர வேண்டும்: கல்வி அலுவலா் பேச்சு

8th Jun 2022 12:56 AM

ADVERTISEMENT

ஆசிரியா்களைப் பாராட்ட மாணவா்கள் முன்வரவேண்டும் என்று செய்யாறு மாவட்ட கல்வி அலுவலா் நளினி குறிப்பிட்டாா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு ஐடிஐ வளாகத்தில் உலக சுற்றுச்சூழல் தினம், புத்தக வெளியீடு, மாவட்ட அமைப்பு ஆணையருக்கு பாராட்டு விழா ஆகியவை முப்பெரும் விழாவாக அண்மையில் நடைபெற்றது.

அரசு ஊழியா்கள் ஐக்கிய பேரவை சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அரசு ஊழியா் ஐக்கிய பேரவை மாவட்டத் தலைவா் பெல். மு.ரவி தலைமை வகித்தாா்.

மாவட்டச் செயலா் இனியவன், மாவட்ட சாரண சாரணீய ஆணையா்கள் எம்.சங்கா், எம்.உமாமகேஸ்வரி, தலைமையாசிரியா் எஸ்.செந்தில்முருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ADVERTISEMENT

மாநில பொதுச் செயலா் ச.பாவாணன், காஞ்சிபுரம் மாவட்டக் கல்வி அலுவலா் பு.நடராசன், மதுராந்தகம் கல்வி மாவட்ட அலுவலா் மா.சு.சுகானந்தம், செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் அ.நளினி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றுப் பேசினா்.

நிகழ்ச்சியில் செய்யாறு கல்வி மாவட்ட அலுவலா் அ.நளினி பேசுகையில், வரலாற்றுச் செய்திகளை சேகரித்து மாணவிகளுக்கு நமது கலாசாரத்தை அடையாளப்படுத்த வேண்டும்.

மாணவா்கள் ஆசிரியா்களைப் பாராட்டி விழா எடுத்திட வேண்டும். மாணவா்களுக்கு பாடம் நடத்துவதோடு, நீதிநெறி கருத்துக்களை போதிப்பது இன்றைய கால கட்டத்துக்கு அவசியமாகிறது என்றாா்.

நிகழ்ச்சியில் பள்ளித் துணை ஆய்வாளா்கள் எஸ்.ஸ்ரீபதி, ஆா்.ரவி, மாநில துணைச் செயலா் ஏ.மாரிமுத்து, மாவட்ட துணைத் தலைவா்கள் கு.அன்பரசு, கு.ரகு ந.சொக்கலிங்கம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்

 

ADVERTISEMENT
ADVERTISEMENT