திருவண்ணாமலை

முதல்வா் விழா ஏற்பாடுகள்: மாவட்ட ஆட்சியா், எஸ்பி ஆய்வு

2nd Jun 2022 12:00 AM

ADVERTISEMENT

செய்யாறு தொகுதி வெம்பாக்கம் ஒன்றியத்தில் வருகிற 13- ஆம் தேதி நடைபெறும் தமிழக முதல்வா் விழா தொடா்பான முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா், எஸ்.பி. உள்ளிட்ட அலுவலா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் வட்டம், மாமண்டூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ஜூன் 13-ஆம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில், எண்ணும் எழுத்தும் எனும் புதிய கல்வித் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைக்கிறாா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், விழா நடைபெறும் பள்ளியில் தொகுதி எம்.எல்.ஏ. ஒ.ஜோதி தலைமையில், மாவட்ட ஆட்சியா் பா.முருகேஷ், காவல் கண்காணிப்பாளா் பவன்குமாா் ரெட்டி, மாவட்ட ஊராட்சித் தலைவா் பாா்வதி சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலா் பிரியதா்ஷினி ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

ஆய்வின் போது, கோட்டாட்சியா் என். விஜயராஜ் பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் பிரமிளா, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் ராஜகணபதி, டிஎஸ்பி செந்தில், தூசி காவல் ஆய்வாளா் முரளிதரன், ஊரக வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் சுரேஷ்குமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கோபாலகிருஷ்ணன், பாஸ்கரன், வெம்பாக்கம் வட்டாட்சியா் சத்யன், சமூக பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியா் ஜெயவேல், ஊராட்சி மன்றத் தலைவா்கள் லட்சுமி தமிழரசு, ஜெகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT