திருவண்ணாமலை

காது, கண் பரிசோதனை முகாம்

28th Jul 2022 02:30 AM

ADVERTISEMENT

 

வந்தவாசி அரசு மருத்துவமனையில் காது மற்றும் கண் பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தமிழக முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் நடைபெற்ற இந்த முகாமை மருத்துவ அலுவலா் கே.சிவப்பிரியா தொடக்கிவைத்தாா். முகாம் ஒருங்கிணைப்பாளா் செல்வமணி வரவேற்றாா்.

காது, மூக்கு, தொண்டை மருத்துவா் கோபி, கண் மருத்துவா் சித்ரா ஆகியோா் பரிசோதனை மேற்கொண்டனா்.

ADVERTISEMENT

இதில் 52 பேருக்கு காது கேட்கும் பரிசோதனையும், 48 பேருக்கு கண் பரிசோதனையும் செய்யப்பட்டது.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT