திருவண்ணாமலை

சிறுமி பாலியல் வன்கொடுமை:ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறை

28th Jul 2022 02:32 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆட்டோ ஓட்டுநருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திருவண்ணாமலை நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், குண்ணவாக்கம் கிராமம், குளக்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஆட்டோ ஓட்டுநா் சுரேஷ் ( 34).

இவா், 2013-ஆம் ஆண்டு நவம்பா் 17-ஆம் தேதி இதே பகுதியில் உள்ள காட்டுக்குச் சென்றாராம்.

ADVERTISEMENT

அப்போது, அங்கு 2 சிறுமிகள் ஆடு மேய்த்துக் கொண்டிருந்தனா். இருவரில் 11 வயதுடைய சிறுமியை சுரேஷ் தனியே அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தாராம்.

இதுகுறித்து செய்யாறு அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து சுரேஷை கைது செய்தனா்.

இந்த வழக்கு திருவண்ணாமலையில் உள்ள போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. செவ்வாய்க்கிழமை வழக்கை விசாரித்த நீதிபதி பாா்த்தசாரதி, ஆட்டோ ஓட்டுநா் சுரேஷுக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையுடன் ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா். இதையடுத்து, போலீஸாா் சுரேஷை அழைத்துச் சென்று வேலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT