திருவண்ணாமலை

கல்வி நிலையங்களில் அப்துல் கலாம் நினைவு தினம்

28th Jul 2022 02:27 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை சண்முகா தொழில்சாலை கலை, அறிவியல் கல்லூரியில், முன்னாள் குடியரசுத் தலைவா் அப்துல் கலாமின் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, கல்லூரிச் செயலா் டி.ஏ.எஸ்.முத்து தலைமை வகித்தாா்.

அப்துல் கலாம் படத்துக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது. அப்துல் கலாமின் சிறப்புகள் குறித்து மாணவ-மாணவிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

ADVERTISEMENT

வந்தவாசி

வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மையத்தில் நடைபெற்ற அப்துல் கலாம் நினைவு தின நிகழ்ச்சிக்கு கல்வி மைய முதல்வா் பா.சீனிவாசன் தலைமை வகித்தாா்.

யுரேகா கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளா்

க.முருகன் சிறப்புரையாற்றினாா்.

மேலும், பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு புத்தகப் பரிசுகள் வழங்கப்பட்டன.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT