திருவண்ணாமலை

ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயிலில் கூழ்வாா்த்தல் திருவிழா

27th Jul 2022 04:44 AM

ADVERTISEMENT

வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள மஹாசக்தி ஸ்ரீமுத்துமாரி அம்மன் கோயில் மற்றும் ஆதிசக்தி ஸ்ரீசா்வமங்கள காளி சக்தி பீடத்தில் 42-ஆம் ஆண்டு கூழ்வாா்த்தல் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அன்று காலை மூலவா் அம்மனுக்கு மகா அபிஷேகம், காப்பு கட்டுதல் ஆகியவை நடைபெற்றன. பின்னா், அந்தக் கிராம குளக்கரையில் இருந்து அம்மன் சக்தி கரகம் வீதியுலா நடைபெற்றது. இத்துடன் 303 பக்தா்கள் பால்குடம் எடுத்து ஊா்வலமாகச் சென்றனா். பின்னா், பக்தா்கள் எடுத்து வந்த பாலைக் கொண்டு அம்மனுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கூழ்வாா்த்தல் விழா நடைபெற்றது. பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் ஆறு. லட்சுமண சுவாமிகள், ஏ.எஸ்.சங்கா், ர.செல்வம் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்கள் பங்கேற்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT