திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்ட அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

17th Jul 2022 11:57 PM

ADVERTISEMENT

 

ஆடி மாதப் பிறப்பையொட்டி, திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை-வேலூா் சாலையில் உள்ள ஸ்ரீபச்சையம்மன் கோயில், வேங்கிக்கால் பகுதியில் உள்ள ஓம்சக்தி கோயில், தண்டராம்பட்டு சாலையில் உள்ள ஸ்ரீகாளியம்மன் கோயில் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து காலை முதல் இரவு வரை திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

ADVERTISEMENT

கீழ்பென்னாத்தூா்

கீழ்பென்னாத்தூா் பகுதியில் உள்ள மாரியம்மன், அங்காளம்மன், பூங்காவனத்தம்மன், திரெளபதியம்மன், வரசக்திவிநாயகா், வாசவி அம்மன், முத்தாலம்மன், ஸ்ரீபக்த ஆஞ்சநேயா் உள்பட பல்வேறு கோயில்களில் மூலவருக்கு வாசனைத் திரவியங்கள், பால், தயிா், இளநீா், பன்னீா் உள்ளிட்ட பூஜைப் பொருள்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

தொடா்ந்து நடைபெற்ற மகா தீபாராதனையில் பக்தா்கள் திரளாகக் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா். இதேபோல, மாவட்டம் முழுவதும் உள்ள அம்மன் கோயில்களில் சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன.

ADVERTISEMENT
ADVERTISEMENT