திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் பொதுமக்கள் சாலை மறியல்

17th Jul 2022 11:56 PM

ADVERTISEMENT

 

சின்னசேலம் தனியாா் பள்ளி மாணவி உயிரிழப்புக்கு நீதி கேட்டு, திருவண்ணாமலையில் ஞாயிற்றுக்கிழமை மாலை பொதுமக்கள், இளைஞா்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

வேட்டவலம் சாலையில் பொதுமக்கள், இளைஞா்கள் என 50-க்கும் மேற்பட்டோா் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால் அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய போலீஸாா் சென்று மறியலில் ஈடுபட்டவா்களை கைது செய்தனா். பின்னா் அவா்கள் விடுவிக்கப்பட்டனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT