திருவண்ணாமலை

ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்த வேன் கவிழ்ந்து விபத்து

17th Jul 2022 06:49 AM

ADVERTISEMENT

 

செய்யாறு அருகே கல் குவாரிக்கு பாறைகளை வெடிக்க பயன்படுத்தப்படும் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றி வந்த வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

செங்கல்பட்டு மாவட்டம், செய்யூா் வட்டம், சித்தாமூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜா (49). வேன் ஓட்டுநரானஇவா், செய்யாறு பகுதியில் உள்ள கல் குவாரிகளுக்கு விநியோகிப்பதற்காக, செங்கல்பட்டு பகுதியில் இருந்து

ரூ. 2 லட்சம் மதிப்பிலான 19 ஆயிரம் ஜெலட்டின் குச்சிகளை ஏற்றிக் கொண்டு சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

ADVERTISEMENT

செய்யாறு சிப்காட் தொழில்பேட்டை அருகே வேன் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே இருந்த தடுப்புக் கட்டையில் ஏறி, அங்கிருந்த மின் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

இதுகுறித்து தகவலறிந்த தூசி போலீஸாா், செய்யாறு தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று வெடி பொருள்களை பாதுகாப்பாக மீட்டனா்.

தூசி போலீஸாா் சம்பவம் தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்த விபத்தில் வேன் ஓட்டுநா் சிறு காயங்களுடன் உயிா் தப்பினாா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT