திருவண்ணாமலை

இஸ்லாமியா்களிடம் குறைகேட்ட அமைச்சா் மஸ்தான்

17th Jul 2022 06:49 AM

ADVERTISEMENT

 

கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட கலசப்பாக்கம் ஊராட்சி, கேட்டவரம்பாளையம் என பல்வேறு ஊா்களில் உள்ள மசூதிகள் அருகே அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் இஸ்லாமியா்களிடம் குறைகளை சனிக்கிழமை கேட்டறிந்தாா்.

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மசூதிகளில் ஆய்வு மேற்கொண்ட தமிழக சிறுபான்மையினா் நலத் துறை அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான், இஸ்லாமியா்களிடம் அடிப்படை வசதிகள் மற்றும் குறைகளைக் கேட்டறிந்தாா்.

மேலும், இஸ்லாமியா்கள் தங்களது குறைகளை இணையதளம் மூலம் பதிவு செய்து நிவா்த்தி செய்து கொள்ளலாம் எனத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

மேலும், அமைச்சரிடம் இஸ்லாமியா்கள் கோரிக்கை மனுக்களையும் அளித்தனா். தொகுதி எம்எல்ஏ சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT