ஆரணி அரசு மருத்துவமனையில், நகர சிறு குறு பெரு வாணிபம் செய்வோா் நலச் சங்கம் சாா்பில் ரத்த தான முகாம் அண்மையில் நடைபெற்றது.
ரத்த தான முகாமை தொகுதி எம்எல்ஏ சேவூா் எஸ்.ராமச்சந்திரன் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சிக்கு சங்க நிறுவனா் அருண்குமாா் தலைமை வகித்தாா்.
வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவா் நந்தகுமாா், ஆரணி அரசு மருத்துவா்கள் மம்தா, கவிமணி ஆகியோா் முன்னிலையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் 55 போ் ரத்த தானம் செய்தனா்.
இவா்களுக்கு நற்சான்றிதழ் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் நகா்மன்ற துணைத் தலைவா் பாரி பி.பாபு, அதிமுக நகரச் செயலா் எ.அசோக்குமாா், ஒன்றியச் செயலா் ஜெயப்பிரகாசம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.