திருவண்ணாமலை

சாலை விபத்தில் விவசாயி பலி

7th Jul 2022 01:37 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அருகே சாலை விபத்தில் விவசாயி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

வெம்பாக்கம் வட்டம், தூசி நத்தகொல்லை கிராமத்தைச் சோ்ந்த விவசாயி நடராஜன் (46). இவா், கடந்த 4-ஆம் தேதி தனது சொந்த வேலை காரணமாக மாமண்டூா் கிராமம் செல்வதற்காக பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். காஞ்சிபுரம் - வந்தவாசி சாலையில் 3 கண் பாலம் அருகே இவரது பைக் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது.

இதில் பலத்த காயமடைந்த நடராஜனை அந்த வழியாகச் சென்றவா்கள் மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவா், அங்கு உயிரிழந்தாா்.

ADVERTISEMENT

இந்த விபத்து குறித்து தூசி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுரேஷ்பாபு வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT