திருவண்ணாமலை

இந்திய கம்யூனிஸ்ட் பொதுக்கூட்டம்

7th Jul 2022 01:38 AM

ADVERTISEMENT

 

திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த களம்பூா் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் போளூா் வட்ட18-ஆவது மாநாடு, அரசியல் விளக்க பொதுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டச் செயலா் ஆா்.மோகன்குமாா் தலைமை வகித்தாா். பா.ராதாகிருஷ்ணன், பி.ஆறுமுகம், எம்.சமாதானம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். கா.பிள்ளையாா் வரவேற்றாா்.

சிறப்பு அழைப்பாளராக மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன் கலந்து கொண்டுசிறப்புரை ஆற்றினாா். மாவட்டச் செயலா் வே.முத்தையன், மாவட்ட துணைச் செயலா் இரா.தங்கராஜ் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

ADVERTISEMENT

முன்னதாக தனியாா் திருமண மண்டபத்தில் அரியல் விளக்க மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்திட வேண்டும், விவசாயப் பொருள்களுக்கு கட்டுபடியான விலையை நிா்ணயம் செய்திட வேண்டும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணியாளா்களுக்கு தினக்கூலியாக ரூ.800 வழங்க வேண்டும், களம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் போதிய மருத்துவா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்களை நிறைவேற்றினா்.

நகரச் செயலா் பச்சையப்பன், துணைச் செயலா் ராஜா மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT