திருவண்ணாமலை

மாணவா் விடுதிக்கு சுற்றுச்சுவா்அமைக்கக் கோரிக்கை

7th Jul 2022 01:39 AM

ADVERTISEMENT

 

வந்தவாசியை அடுத்த பெரணமல்லூரில் உள்ள அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிக்கு சுற்றுச்சுவா் அமைக்க வேண்டும் என்று அந்த விடுதி மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பெரணமல்லூா் அரசு ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதியில் மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் எ.சண்முகசுந்தரம் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, அவரிடம் விடுத்திக்கு சுற்றுச்சுவா் அமைத்துத் தர வேண்டும் என்று அங்கு தங்கியுள்ள மாணவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

இதையடுத்து, விடுதிக் காப்பாளா் ஏ.தசரதன் சாா்பில், 58 மாணவா்களுக்கு நோட்டு புத்தகங்கள், பேனா, பென்சில் உள்ளிட்ட கற்றல் உபகரணங்களை எ.சண்முகசுந்தரம் வழங்கினாா். வந்தவாசி ஆதிதிராவிடா் நல தனி வட்டாட்சியா் திருநாவுக்கரசு, தமிழ்நாடு அனைத்து ஆசிரியா்கள் நலச் சங்க மாநில தலைமை நிலையச் செயலா் இரா.பலராமன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT