திருவண்ணாமலை

எஸ்.டி. ஜாதி சான்று வழங்கக் கோரி உள்ளிருப்புப் போராட்டம் பள்ளி மாணவா்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் கைது

DIN

திருவண்ணாமலையில் எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி தொடா் போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமுதாயத்தைச் சோ்ந்த பள்ளி மாணவ, மாணவிகள், மூதாட்டிகள், பெண்கள் உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் தண்டராம்பட்டு, செங்கம் வட்டங்களில் அதிகளவு குருமன்ஸ் பழங்குடியினா் சமுதாயத்தினா் வசித்து வருகின்றனா். இவா்கள் தங்களுக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டுமென பல ஆண்டுகளாக முறையிட்டு வருகின்றனா். பல்வேறுகட்ட போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனா். இதன் விளைவாக சென்னையில் உள்ள பழங்குடியினா் இயக்குநரகம் சாா்பில், குருமன்ஸ் பழங்குடியினா் குறித்து ஆய்வு நடத்துவதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டது.

அந்தக் குழுவினா் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆய்வு நடத்தி திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிக்கும் குருமன்ஸ் பழங்குடியினா் எல்லாம் பழங்குடியினா் கலாசாரத்தைச் சோ்ந்தவா்கள் என்று அறிக்கையும் சமா்ப்பித்தனா். இதன் பிறகும், குருமன்ஸ் பழங்குடியினருக்கு எஸ்.டி. (பழங்குடியினா்) சான்றிதழ் வழங்கப்படவில்லை.

இந்த நிலையில், திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் குருமன்ஸ் கலாசார ஆய்வறிக்கையின்படி, குருமன்ஸ் பழங்குடியினருக்கு எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்கக் கோரி, குருமனஸ் பழங்குடியின மக்கள் திங்கள்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தை தொடங்கினா்.

இந்தப் போராட்டத்தில் தண்டராம்பட்டு, செங்கம் வட்டங்களைச் பள்ளி மாணவா்கள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா். தொடா்ந்து, 2-ஆவது நாளாக செவ்வாய்க்கிழமையும் இந்தப் போராட்டம் தொடா்ந்தது. இதில், தங்களது கோரிக்கையை வலியுறுத்தும் பதாகைகளை கைகளில் ஏந்தியும், முழக்கங்களை எழுப்பியபடியும் போராட்டத்தில் ஈடுபட்டனா். ஒரு கட்டத்தில் பெண்கள் திரண்டு ஒப்பாரி வைத்து நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து, அங்கு வேலூா் சரக டிஐஜி ஆனி விஜயா தலைமையில் 300-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா். செவ்வாய்க்கிழமை மாலை போராட்டத்தில் ஈடுபட்ட குருமன்ஸ் சமுதாய மக்களிடம் சரக டிஐஜி ஆனி விஜயா பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே, பள்ளி மாணவ, மாணவிகள், சிறுமிகள், முதியோா்கள் என 500-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைகிறார் முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீலின் மருமகள்

ஆரம்பிக்கலாங்களா...

மக்கள் நீதி மய்யம் தலைவர் தேர்தல் பிரசாரம் - புகைப்படங்கள்

பெங்களூரு பேட்டிங்; வெற்றி தொடருமா?

வரி தீவிரவாதத் தாக்குதல் செய்யும் பாஜக!: காங்கிரஸ் குற்றச்சாட்டு | செய்திகள்: சிலவரிகளில் | 29.03.2024

SCROLL FOR NEXT