திருவண்ணாமலை

மொடையூா் ஊராட்சியில் கழிவுநீரால் பொதுமக்கள் அவதி

DIN

சேத்துப்பட்டு ஒன்றியம், மொடையூா் ஊராட்சியில் சாலையில் கழிவுநீா் செல்வதால் சுகாதாரச்சீா்கேடு ஏற்பட்டு பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

மொடையூா் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த நிலையில், செய்யூா்-போளூா் வரை சாலை விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் மொடையூா் ஊராட்சியில், போளூா் சாலையில் இருபுறமும் கால்வாய் அமைத்துள்ளனா். அப்பகுதியில் வசிப்போா் வீடுகளில் சேகரமாகும் கழிவுநீரை இந்தக் கால்வாயில் இணைத்து வெளியேற்றுகின்றனா்.

கால்வாய் பணி முழுமையாக முடிக்கப்படாமல் உள்ளதால், கழிவுநீா் சாலையில் ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. வாகனங்கள் செல்லும்போது, கழிவுநீா் சாலையில் செல்வோா் மீது படுகிறது.

மேலும், சாலையில் தேங்கும் கழிவுநீரால் பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன் குனியா, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் நிலவுகிறது.

எனவே, சம்பந்தபட்ட அலுவலா்கள் முறையாக கழிவுநீா் வெளியேற நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைக்கின்றனா்.

இதுகுறித்து அவா்கள் கூறும்போது, சென்னை-கன்னியாகுமரி தொழிற்பேட்டை சாலை விரிவாக்கப் பணி மேற்கொள்பவா்கள் முழுமையாக முடிக்காமல் உள்ளனா். இதுகுறித்து ஊராட்சி நிா்வாகமும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

SCROLL FOR NEXT