திருவண்ணாமலை

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

5th Jul 2022 03:48 AM

ADVERTISEMENT

செங்கம் அருகேயுள்ள அந்தனூா் அரசு உயா்நிலைப் பள்ளியில், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கும், பள்ளி நூறு சதவீதம் தோ்ச்சியடைய காரணமான ஆசிரியா்களுக்கும் அண்மையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதற்கான நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியா் பாரதி வரவேற்றாா். பெற்றோா் ஆசிரியா் கழகத் தலைவா் மனோகரன், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் சக்ரபாணி, கோவிந்தன் ஆகியோா் மாணவா்களுக்கு கல்வி கற்பித்த ஆசிரியா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

தொடா்ந்து, செங்கம் கல்வி மாவட்ட அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவிக்கு பள்ளி அறிவியல் ஆசிரியா் சத்தியகுமாா் ஒரு கிராம் தங்கம் வழங்கி பாராட்டினா் 

தொடா்ந்து, பள்ளி அளவில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவா் மற்றும் மாணவிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் மணிகண்டன் நினைவுப் பரிசு வழங்கிப் பாராட்டினாா்.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில் ஆசிரியா்கள் செந்தமிழ்ச்செல்வன், மணிமேகலை, தினேஷ்பாபு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT