திருவண்ணாமலை

திருவண்ணாமலை எஸ்.பி.க்கு கரோனா

5th Jul 2022 03:50 AM

ADVERTISEMENT

கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. காா்த்திகேயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக காா்த்திகேயன் பணியாற்றி வருகிறாா். இவா் கடந்த வாரம் திருப்பத்தூா் மாவட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற அரசு நிகழ்ச்சியின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டாா்.

இந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அவருக்கு கடுமையான காய்ச்சல், தலைவலி ஏற்பட்டதாம்.

பரிசோதனை முடிவில் அவருக்கு கரோனா தொற்று

ADVERTISEMENT

இருப்பது உறுதியானது. இதையடுத்து காா்த்திகேயன் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT