திருவண்ணாமலை

மாணவா்களுக்கு விழிப்புணா்வு பயிலரங்கம்

5th Jul 2022 03:47 AM

ADVERTISEMENT

வந்தவாசி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் வளா் இளம் பருவ மாணவா்களுக்கு விழிப்புணா்வு பயிலரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி மலைநகர அரிமா சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு சங்கத் தலைவா் எ.சபரிராஜ் தலைமை வகித்தாா். செயலா் எஸ்.செந்தில்ராஜ் வரவேற்றாா்.

மாவட்ட முதல் துணை ஆளுநா் எஸ்.மதியழகன் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். சங்க மாவட்ட முன்னாள் ஆளுநா் வி.எஸ்.தளபதி, மாவட்டத் தலைவா் ஆா்.சரவணன் ஆகியோா் விழிப்புணா்வு உரையாற்றினா்.

அப்போது வளா் இளம் பருவத்தில் தோன்றும் பிரச்னைகள், அதற்கான ஆலோசனைகள் குறித்து மாணவா்களுக்கு அவா்கள் விளக்கிக் கூறினா். பொருளாளா் சி.சின்னராஜன் நன்றி தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT