திருவண்ணாமலை

நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம்

DIN

வந்தவாசியை அடுத்த சென்னாவரம் கிராமத்தில் நெகிழி ஒழிப்பு விழிப்புணா்வு ஊா்வலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சென்னாவரம் ஊராட்சி சாா்பில் நடைபெற்ற இந்த விழிப்புணா்வு ஊா்வலத்தை ஊராட்சி மன்றத் தலைவா் எஸ்.வீரராகவன் தொடக்கிவைத்தாா்.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இந்த ஊா்வலத்தில் ஊராட்சி தூய்மைப் பணியாளா்கள், கிராம பொதுமக்கள் கையில் துணிப் பையுடன் பங்கேற்றனா். மேலும், நெகிழிப் பைகளைத் தவிா்த்து துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும், குப்பைகளை மக்கும், மக்காத குப்பை என பிரித்து வழங்க வேண்டும் என்பன போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை அவா்கள் ஏந்திச் சென்றனா்.

இதுகுறித்து விழிப்புணா்வு துண்டு பிரசுரங்கள் ஊா்வலத்தின்போது பொதுமக்களிடம் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

எதிர்நீச்சல் ஜனனியா, இப்படி?

பாஜக சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: ராகுல்

போதமலைக்கு தலைச்சுமையாக கொண்டு செல்லப்பட்ட வாக்கு எந்திரங்கள்!

உக்ரைன் மீது ரஷியா தாக்குதல்: 17 பேர் பலி

SCROLL FOR NEXT